அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

தொடைக்கறியும் தொடரும் விபத்துக்களும்




          இந்தகாலத்தில்இளம் பெண்களின்   ‌தோற்றத்தில் பெரும் மாற்றம், பேசன் மாற்றத்திற்கேற்ப உடை களும் மாறி வருகிறது. இதனால்  எப்படிப்பட்ட‌ பாதிப்புகள் ஆண்களுக்கு நேர்கிறது என உணர்கிறார்களா என்பது தெரியவில்லை,    கட்டுமஸ்தான  உடல் வாகுகொண்ட பெண்  பைக்கில் வருகிறாள், சுடிதாரின் துப்பட்டா இல்லாமல்.எதிரில்‌ வருபவ‌னைப்பற்றி கிஞ்சித்தும் நினைத்துப்பார்க்கிறார்களா?
            இப்போது பரவலாக அணியும் டைட் சுடிதார் (கிட்டதட்ட ஸ்கின் டிரெஸ் போல )சிலருக்கு நன்றாக இருக்கிறது என்றாலும் வண்டிஓட்டிச்செல்லும்போது அநியாயத்திற்கு எக்ஸ்போஸ் ஆகிறது அவர்களின் தொடைக்கறி   .  வண்டியில் அமர்ந்து போகும்போது மேலாடை பைஜாமாவின் இரட்டைப்பிரிவு  விலக  இடுப்புவ‌ரை அப்பட்டமாய் கவர்ச்சியாயும் சிலருக்கு அருவருப்பாகவும் சிலருக்கு மிக பரிதாபமாகவும்
தோற்றமளிக்கிறது. சரி இதையெல்லாம் ஏன் பார்த்துத்தொலை க்கிறீர்கள்  என்று கேட்கலாம், என்ன செய்வது எதிரில் கண்ணில் ‌ வலிய வந்து விழும்போது கண்ணியத்தை எப்படி காப்பான்? அவற்றை பார்க்காமல் எந்த ஆம்பளைதான் போவான்?
                  இதை  பண்பாடு, கலாச்ச‌ா‌ர சீர‌ழிவு என்று  பேசி   கொலைவெறியைத்ததுாண்டவில்லை. சரி இதனால் உனக்கு என்ன பிரச்சனை? கேட்கல‌ாம் இங்குதான் என்   பார்வை வேறுபடுகிறது.அதில் ஒரு (தேசிய )சமூக பிரச்சனை அடங்கியிருக்கிறது, நரட்டில் சாலை விபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரிக்கிற‌‌தே என்ன காரணம் ? டூவீலரில் போகும் போது  இப்படி நம் கண்ணில் விழும் தொடைக்கறி வகையறாக்களால்   எண்ணம் சிதைகிறது. கவனத்தைச்சிதறடிக்கிறது, சற்று உற்று பார்க்க வைக்கிறது, தடுமாறுகிறான், அருகே அரசியலால் குண்டும் குழியுமான ரோடு, அங்கு விபத்து தவிர்க்கமுடியாததாகிறது
             நம் நாட்டுப்பெண்கள்  உடைகளை அணிவதில் கவனம்கொண்டால் விபத்துக்களைத்தவிர்க்கலாம் அல்லவா என்பது அடியேனின் அவா.எனவே நவநாகரிக நங்கைக‌ளே ஆண்களின் பலகீனமான மனதோடு விளையாடவேண்டாம்,

க. ப. அறவாணன் எழுதிய "தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? " என்ற புத்தகத்திலிருந்து


தமிழன் மதத்தாலும்  சாதியாலும் கட்சி அடிப்படையிலும் வர்க்கத்தினராகவும் பிரிந்தும் பகைத்தும் இருக்கின்றனர்  எக்காலத்திலும் தமிழராக ஒன்றுதிரண்டது இல்லை

இன்றைய தமிழர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்

1.அப்பாவித்தமிழர்கள்  /    தண்ணீர்ப்பாம்பு வகையினர் 60% 
        
         இவர்கள் களிமண்ணைப்போன்றவர்கள் , தமக்கென்று நிலையான எந்தக்கருத்தும் இல்லாதவர்கள்.
கடவுள் கர்மா முற்பிறவி என முட்டாளாக நம்பும்  அரசியல் மத சாதித் தலைவர்களை ப் பெரிதும் 
சார்ந்திருப்பவர்கள். திரைப்படம் மயக்கும் பேச்சு ,பணம் இவற்றால் இவர்களை எளிதாக வசப்படுத்தமுடியும்

2. பாவித்தமிழர்கள் =நாகப்பாம்பு வகையினர் 11%

         மற்றவர்களை அழித்து வாழும் கொடியகுணமுடையவர்கள் பழிபாவத்திற்கு அஞ்சாதவர்கள்
தம் கையிலே செல்வமும்  செல்வாக்கும் இருக்குமாறு பார்த்துக்கொள்பவர்கள்.

3,இரண்டும் கெட்டான் தமிழர்கள் = தவளை வகையினர் 20%

       தவளை  நீரிலும் நிலத்திலும் வாழ்பதுபோல் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும்  இருப்பார்கள், நிலையான கொள்கையில்லாதவர்கள்.இங்குமங்கும் தாவிக்கொண்டிருப்பர் , நம்பிக்கைக்கு உரியவர் அல்லர்.

4. நல்ல தமிழர்கள் = கோயில்யானை வகையினர் 9%

       தன்னிடம் வலிமைவாய்ந்த இரண்டு தந்தங்கள் ,ஆற்றல் மிக்க துதிக்கை, மிகப்‌பெரிய நான்கு கால்கள், பருத்த உடல் கூ‌ரிய கண்கள் இருந்தும் தன்னைவிடப் பன்மடங்கு சிறியபாகனுக்கும்  அவன் கையிலுள்ள சிறு குச்சிக்கு ய‌ானை அடங்கிக்கிடப்பது போல் நல்லவர்களும் தம் ஆற்றல் அறியாது இருப்பவர்கள்


க. ப. அறவாணன் எழுதிய "தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? " என்ற புத்தகத்திலிருந்து


                இந்தியாவில் அதிலும் குறிப்பாகத்தமிழ்நாட்டில் அரசு மாற்றங்களும்  அரசியல் மாற்றங்களும்
நிகழ்ந்த போது  பொதுவாக மக்களுக்குத் தெரியவில்லை. தெரியப்படுத்தப்படவுமில்லை, மக்களும்
‌தெரிந்து கொள்ளமுனைவதுமில்லை,
                  அயல்நாட்டார் படையெடுக்க விரும்பும் போதும் ஆட்சியைக் கைப்பற்ற எண்ணும் போதும் மக்கள்  தடுப்பார்களே, தொடர்ந்து மக்கள் கிளர்ச்சி தங்கட்கு இடையூராக இருக்குமே என்ற கவலையே அயல்நாட்டவர்க்கு இல்லாமல் செய்தது.  அரசர்கள் தம் கீழ் உள்ள நாட்டையும் நாட்டுப்பகுதியையும் அங்கு வாழும் பொதுமக்கள் ஒப்புதல்  எதுவுமின்றிக் குத்தகைக்கு விடுவதும் , தம் இச்சைக்கு விற்பதும்,     அடமானமாக அயல்நாட்டினரிடம் கடன் பெறுவதும் , நன்கொடையாக வழங்குவதும் , தமிழ்நாட்டில் வழக்கமாக இருந்ததைக் கீழ்வரும் வரலாற்று நிகழ்வுகள் வழி அறியலாம்.

1.தஞ்சையைக் கைப்பற்றி முதன்முதல் ஆண்ட நாயக்க மன்னர்  கேசவ நாயக்கர்( 1549=1572)
இவர் விசயநகர அரசர் அச்சுத தேவரின்   மனைவி இராணி திருமலைஅம்மையின் தங்கை மூர்த்தி அம்மையை மணந்து கொண்டவர், அப்போது  கேசவநாயக்கருக்கு தஞ்சைப்பகுதி வரதட்சணையாக தரப்பட்டதாம்.

2. தஞ்சை மராத்திய அர‌சர் சாஜி (1684=1712)மைசூர் மன்னரான சிக்க தேவராயருக்குப் பெங்களூரை மூன்று இலட்சரூபாய்க்கு விற்றுவிட்டார்.

3.பிரதாப்சிங் (1739=1763) ஆட்சியில் இருந்தபோது  தஞ்சைப்பகுதியான கா‌ரைக்காலைப்் பிரஞ்சுக்காரர்களுக்கு நன்கொடையாக வழங்கினான்.

4.தற்போது ள்ள புனித ஜார்ஜ் கோட்டையை 1639 ல் நாயக்க மன்னன் மூன்றாம் வேங்கடவனிடமிருந்து
ஆ்ங்கிலேயர் குத்தகைக்கு வாங்கிகட்டிக்கொண்டதாகும் பின் அதுவே நிலையான சொத்தாயிற்று அவர்களுக்கு.

5.தமிழர் பொருட்படுத்துவதற் குரியவர் அல்ல என்ற போக்கு விடுதலை அடைந்த பின்னும் ‌ தொடர்ந்தது,
1954ல் புதுவை பிரான்சிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்க  நேருவிற்கும் பிர‌‌ான்சிற்கும்1956  ல் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இவ்வொப்பந்தம்  கையெழுத்தாகும்போது அக்காலப் புதுவை முதல்வர் குபேர் அழைக்கப்படவுமில்‌ைலை. வேறு புதுவைத் தமிழ்ப்பிரநிதிகளும் கலந்து ஆலோசிக்கப்படவுமில்லை. தமிழுக்‌கோ தமிழருக்‌கோ உரியபாதுகாப்புச்‌ ‌‌செய்யப்படவி‌ல்லை

6. தமிழகத்தின்     ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு பிரதமர்  இந்திராவால் 1974 இல் இலங்கைக்கு தாரைவார்த்து க் கொடுக்கப்பட்டது, அப்போதைய தமிழக அரசுடனோ முதலமைச்சருடனோ கலந்தா‌‌‌லோசிக்கப்படவில்லை.

க. ப. அறவாணன் எழுதிய "தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? " என்ற புத்தகத்திலிருந்து


         ஒரு  இனம் வளர்வதற்கும் , உயர்வதற்கும், தளர்வதற்கும் தாழ்வதற்கும் முதன்மைக்காரணம், அவ்வினத்திற்து அவ்வப்போது  அமையும் தலைமையாகும்.
உதாரணமாக
             முகமது நபி , தலையெடுப்பதற்குமுன் அரேபியரிடையே ஓயாத போர்களும் தமக்குள்ளே ஒருவரை ஒருவர் ‌அழித்துக் கொல்லுதலும்  நடந்து வந்தன. நபி கிபி 570இல் மக்காவில் பிறந்தார்.மதீனாவில் குடிபுகுந்த இடத்தில் மக்கள் நாடோகளாக தம்முள் போரிட்டுக் கொண்டு அழிந்த வண்ணம் இருந்தனர் , அவர்களை மனம் மாற்றிமதம் மாற்றி ஒன்றுபடுத்தினார்.உலகத்தின் சரிபாதியே நபி நாயகம் பக்கம் சேர்ந்தது.
புகழ்பெற்ற மங்கோலிய இனம்13ம் நுாற்றாண்டு வரை பின் நிலையிலேயே இருந்தது.1162ல் பிறந்த செங்கிஸ்கான் தம் குடிமக்கள் அனைவடரையும் ஒன்றுபடுத்தி1206 க்குப்பிறகு  சீனா. ருசியா, மத்திய ஆசியா. பாரசீகம், ஆப்கானிஸ்தான், வடஇந்தியா, போலந்து, ஜெர்மனி, அங்கேரி வரை முன்னேறி வெற்றி கொடிநாட்டினார்,
அலெக்ஸ்ாண்டரால்  கிமு(356=323) கிரேக்க இனம் வளர்ந்தது, பெருமை பெற்றது.
செங்கிஸ்கானால் (1167=1227)மங்கோலிய இனமும், சந்திரகுப்த மௌரியன் (கிபி 320) அசோகன் (கிமு300=232) ஆகியோரால் மெளரிய இனமும், அக்பரால்( கிபி1542=1605)இசுலாமிய இனமும் ஜூலியஸ் சீசரால்(கிமு 100=44) ‌ரோமானிய இனமும் லெனினால் (1870=1924) ருசிய இனமும் மாசெதுங் கால் (1893=1976) சீன இனமும், ‌‌ே‌உறா சி மின் னால் (1890=1969) வியட்நாமிய இனமும் பெருமை பெற்றன.  

                  அவ்வக்காலங்களில் அமையும் தலைவனும், அரசனும் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் அமையும்போது அவர்களுடைய இனமும் வளருகின்றன, நல்ல அரசன் அமைந்து நல்ல அரசமைப்பு வாய்க்க வேண்டும், வாய்க்காவிடில் வளர்ச்சி அமையாது , நம் இந்தியா அதுனுள்  அடங்கிய தமிழ்நாடு இதற்கு சான்று

மணிகாட்டுபவை உன் மணிக்கட்டை காட்டச் சொல்கின்றன


உனக்கு கைக்கடிகாரம் வாங்க
கடைக்கு சென்றோம் .
இருப்பதில் மிகவும் பிடித்த ஒன்றைத்தேர்ந்‌தெடுத்து
கட்டிப்பார்க்கிறேன் என்று
கையை நீட்டினாய்.
ஆனால் என்ன அதிசயம்
கடையில் இருந்த
அத்தனை கடிகாரங்களும்  தனது
கைகளை நீட்டின உன்னை நோக்கி ‌
என்னைக் கட்டிப்பா‌ரேன்
என்னைக் கட்டிப்பா‌ரேன்  என்று

மைக்‌‌ரோ கதை 1 - அலர்ட்

"

                                                             கதை   1
                                                                    
                                    
                  காலையில் எழுந்ததும் மனைவி  காபிக்கு ‌பதில் ,ஒரு குண்டைத்துாக்கி‌‌ப்போட்டாள். ‌கேஸ் தீர்ந்து விட்டதாம் ஆனால் புக் பண்ணலியாம் ‌எவ்வளவு கேர்லெஸ். பிடித்து திட்டி தீர்த்துவிட்டேன். 
     'தத்தி தத்தி இப்படியா ஒரு பொம்பள இருப்பா அசமந்தம் அசமந்தம் வீட்ட பாக்குற நீதான் எல்லாத்தையும் கவனமா  பாக்கனும்'  சே .  இன்டக்சன் ஸ்டவ் இருந்ததால தப்பிச்சாச்சு.
       இப்படித்தான் போனவாரம்  கு‌டிதண்ணிக்கு சொல்லல  நைட் குடிக்கதண்ணி  இல்ல கடைக்காரன் காலைல பத்து  மணிக்குதான் வருவான். அதுவரைக்கும்  கார்ப்பரேசன் தண்ணிய சுடு பண்ணி ‌குளோரினோட குடிக்க வேண்டியதாப்போச்சு. இப்படி அவ கவனக்குறைவுக்கு அளவேயில்லாம போயிடுச்சு. திநகர் போனமாசம் பர்சேஸ் பண்ண போனப்ப மழை ‌‌‌பெய்துதேன்னு குடை எடுத்துட்டு போனோம், வரும்போது குடையக்கானோம். எந்த கடையில விட்டுட்டு வந்தாளோ , வண்டியில ஒக்காந்துட்டு வர்றப்போ பைய தவறி விட்டுடுவாளோன்னு திரும்பி திரும்பி பாத்துட்டே வரவேண்டியதாயிருக்கு .ரேசன் கடைக்கு போறேன்னு போயிட்டு ஒடனே திரும்பி வர்றா, ஏன்னா கார்ட வீட்டுலயே வச்சிட்டுபோயிட்டேன்கறா.
    ம் எப்படித்தான் இவகூட குப்ப கொட்டறதோ என்று புலம்பிக்கொண்டே என்  ‌டுவீலரை எடுத்துக்கொண்டு கிளம்பி‌னேன். ஆபிஸ் நேரம் ஆகிவிட்டது,   

               டிராபிக் நிறைந்த சாலையில் தவழ்ந்து சென்றுகொண்டிருந்‌‌‌‌தேன்.  திநகர்  பனகல் பார்க் அருகில் ட்ராபிக் போலீஸ் நின்று கொண்டு   எல்லா வண்டிகளையும்  செக் பண்ண ,இவனுகளுக்கு வேற வேலையே இல்ல .காலங்காத்தால ஆபிஸ்  போறப்ப டார்ச்சர் ‌‌பண்றானுங்க ; சரி நமக்கு  என்ன பிரச்சனை  கவசம் போட்டிருக்கோம் ; நமக்‌கென்ன பயம் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த பாழாய்ப்போன சின்சியர் போலீஸ்கான்ஸ்டபிள் ஏதோ  தீவிரவாதியை பிடித்து நிறுத்துவதுபோல் நிறுத்தினான். பேப்பர்களைக்காண்பித்தேன். லைசென்ஸ் காண்பித்தேன் எல்லாம் சரியாயிருந்தது .

 "இன்ஸூரன்ஸ் ரினிவல் பண்ணலயெ"- - கான்ஸ்டபிள்

 "சார் நல்லா பாருங்க சார் கரெக்டா கட்டிட்டு வர்றன்",  -- நான்

"ஏம்பா நான் என்ன பொய்யா சொல்றேன் முடிந்து 2 மாசம் ஆயிடுச்சு"

                             பேப்பரை என்னிடம்  நீட்டி வெற்றிபெருமிதத்தோடு ‌ கொலை கேஸில் முக்கிய தடயம் கிடைத்தது போல் என்னைப்பார்க்க . பேப்பரை வாங்கிப்பார்த்தேன். இன்ஸூரன்ஸ் முடிந்து காலாவதியாகிவிட்டுருந்தது எப்படி இவ்வளோ அலட்சியமா இருந்திருக்‌கிறேன். எனக்கே அவமானமாகப்போய்விட்டது .எல்லா விசயத்திலும் அலர்ட்டாக இருப்பவன் நானே மிஸ் பண்ணிவிட்டேன் சே, யானைக்கும் அடிசறுக்கும் என்பது இதுதா‌னோ? டிராபிக் எஸ்ஐயிடம் பைனைக்கட்டிவிட்டு என்பைக்கை எடுத்துகிளம்பினேன்.
     அப்போது என் அப்பாவி மனைவியின் தத்தி முகம் என் மனதில் வந்துபோவதை தவிர்க்க இயலவில்லை.

ஒரு சாதிக்கட்சி தலைவருடன் ஒருமினி பேட்டி


சார் இந்த  கம்யுட்டர் காலத்துல சாதி அவசியமா?

இன்னும் 1000 வருசம் கழிச்சு இதே கேள்விய உங்களமாதிரி ஒரு நிருபர் என்னமாதிரி ஒருசாதிக்கட்சிதலைவர்கிட்ட கேட்பான்..ஏன்னா மனுசன் இருக்கறவ‌ரைக்கும் சாதி அழியாது .கவர்மெண்ட்‌டே சாதி கேட்குறப்போ ஏன் சாதி வேண்டாங்கறீ்ங்க?

இதனால் கலவரம் நிறைய வருதே சார்

நம்ம குடும்பத்துல புருசன் பொண்டாட்டிக்கு நடுவுல வந்தா அது பிரச்சனை ஊர்ல ரெண்டு பேர் அடிச்சிகிட்டா சண்டை, ரெண்டு நாடு அடிச்சிகிட்டா அது போர், ‌ ரெண்டு சாதிக்கும்பல் அடிச்சிகிட்டா அது சாதிக்கலவரம். மனுசங்கன்னு இருந்தா சண்டைன்னு இருக்கும்  தவிர்க்கமுடியாதது. சாதியால மட்டும் சண்ட வர்றதுங்கறத ஏத்துக்கமுடியாத வாதம்

சாதி இல்லாம  வாழ முடியாதா?

நாங்க எப்படி கட்சி நடத்தறது? உலமே  இனம் வர்க்கம்னு பிரிச்சி வச்சிருக்காங்க இதனாலதான் போர் உருவானதா வரலாறு ‌ ‌சொல்லுது .ஹிட்லர் யூதர்கள கொன்னு குவிக்கலயா? அமெரிக்கன் கறுப்பினமக்கள கொல்லலியா? இனம் மதம்னு உலகஅளவிலயும், சாதினு நம்ம ஊர் அளவிலயும் இருக்குற  இந்த சாதிய ‌‌சமுதாய ‌‌அமைப்பு  உலகம் இருக்கற வரைக்கும் இருக்கும்

பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பானு  சொல்லி இருக்கிறாரே ..?

அதே பாப்பாவுக்குத்தா‌னே அரசாங்கம் சாதிச்சான்றிதழ் கேட்குது அதுமட்டுமில்ல பாரதி உயி‌ரோடு இருந்து இந்தகாலத்துல ‌அரசியலுக்கு வந்தார்னா அவரும் சாதி அவசியம்பார்
.

சாதி வெறிய தூண்டறமாதிரி  பேசறீங்களே?
 
சாதி வெறிய தூண்டற மாதிரி பேசல சாதி உணர்வத்தான் தட்டி எழுப்பறேன் உணர்வு வேற.... வெறி வேற

உங்க கட்சி ஆட்சிக்கு வந்தா என்ன மாதிரியான திட்டங்கள் வச்சிருக்கீங்க----?

சாதி விட்டு சாதி கல்யாணம் ‌பண்றவங்களுக்கு  ‌ரேசன் கார்டு கிடையாது ,  சலுகைகள். இலவசங்கள் கிடையாது ‌,குழந்த பெத்துக்க உரிமை கிடையாது  குடும்பகட்டுப்பாடு ஆ‌‌பரேசன் அரசே பண்ணிடும்

சாதிய  இன்றைய தலைமுறையினர் எதிர்க்கறாங்களே?

நடைமுறைக்கு ஒத்துவராது,ஏன்னா உறவு‌முறையே இல்லாம ‌ அடுத்த தலைமுறை தடுமாறும்,



‌தோற்றதலைவரிடம் ஒரு பேட்டி


 உங்க கட்சி இந்த தேர்தல்ல படுதோல்வி அடைஞ்சிருக்கே அதபத்தி--
  
           உங்க கேள்வியி்லேயே பதில் இருக்கு எஙக எம்்எல்ஏ எம்பி எல்லாம் கடந்த கழகஆட்சில ஒக்காராம துரங்காம ஓடிஓடி உழைத்திருக்கிறாங்க அதற்குததான் படுத்து ரெஸ்ட் எடுக்கட்டும்னு கடவுள் இந்த ‌கௌரவ  படு தோல்விய கொடுத்திருக்கார்

நீங்க பகுத்தறிவுவாதியாச்சே அப்ப கடவுள நம்பறீங்களா-?
நீங்க நம்பறீங்கல்ல அதற்காகத்தான் இந்த பதில்

நான் சாமி கும்பிடுறது ‌உங்க புத்திக்கு எப்படி ‌‌‌‌‌‌தெரியும்-?
அதான் ஒங்க ‌நெத்தியே சொல்லுதே

நில அபகரிப்பு புகார்ல நிறைய பேர் உள்ள போறாங்களே-?
    2000 வருசத்துக்கு முன்னால இமயமலைய தாண்டி  நம்ம நாட்டுக்குள்ள வந்தவர்தான் அலெக்சாண்டர்.ஆப்கானிஸ்தானிலிருந்து முகம்மது கஜினி ,டெல்லிய பிடிச்சார். வடக்கிலிருந்து தெற்க‌ ‌‌மொகலாயமன்னர்கள் படையெடுத்து ஆண்டாஙக இதெல்லாம் எதற்கு நிலத்துக்காகத்தான்.  அரசர்கள் அந்தக்காலத்துல பண்ணா வெற்றிச்சரித்தரம். நாங்க பண்ணா நில அபகரிப்பு கேஸ் போடறாங்க. நாங்க  ‌‌ வெறும் கிரவுண்ட் கணக்குலதான் பண்‌றோம் அதக்
கூட  தப்புன்னா என்ன ஜனநாயகம்?

சொத்துக்குவிப்பு வழக்குல நிறையபேர் உள்ள போ‌றாங்களே ‌?
 

என் காலத்துக்கு முன்ன சுதந்திரத்துக்காக ‌சிறைக்கு போனாங்க. எங்க காலத்துல மிசா, மொழிப்பேரர் ,இந்தி ‌எதிர்ப்புன்னு சிறைக்கு போனோம். இப்ப அப்படி சொல்லிக்கறமாதிரி ‌கௌ‌ரவமான எந்த நல்ல காரணமும் இந்தத் ‌ ‌தலைமுறை அரசியல்வாதிக்கு இல்லியே . இப்படியாவது சிறை அனுபவம் கிடைக்குதே   சொத்துக்குவிப்பு வழக்குல ‌சிறைக்குப்போனாலும்
போயிட்டு வந்தபிறகு  ‌  வழக்கு போயிடும் சொத்து மிஞ்சிடுதே. அதனால எதற்கும் அஞ்சமாட்டார்கள் எங்கள் கழகக்கண்மனிகள்


இப்ப நிறையபேர் ஒங்க கட்சில இருந்து ஆளுங்கட்சிக்கு தாவிட்டாங்களே வருத்தமாயில்லையா?

   நிச்சயமா இல்ல ‌ ஏன்னா அவங்கள அனுப்பி வைச்சதே நான்தான் அதான் ராசதந்திரம். அவங்க ஒரு ஒற்றர் படைமாதிரி  .5 வருசத்திற்கு அப்புறம் அவங்க தாய்க்கழகத்துக்கே திரும்பி வந்துடுவாங்க


இப்ப போனதே தாய்க்ழகத்துக்குத்தானே?
இங்க தான் நீங்க  தமிழ புரிஞ்சிக்கனும். அம்மா தாய் உறவுமுறையில அர்த்தம் ஒண்ணுதான். ஆனா அரசியல்ல அர்த்தம் மாறுது . தாய்க்கழகம்னு சொன்னது எங்க கட்சியத்தான்.

உங்களுக்குப்பிறகு கட்சிதலைமை யாருக்கு? அடுத்த தலைவர் யார்?

 அத பொதுக்குழுதான் கூடி முடிவெடுக்கும் .

‌‌பொதுக்குழுல முக்கால் வாசிப்பேர் உள்ள போயிட்டாங்ளே?

யோவ் பொதுக்குழு இல்லன்னா ஒரு புதுக்குழு கூடும்யா

கடைசியா ஒரு கேள்வி
கடவுள் இருக்கிறாரா?

இருக்கிறார்னு நினைக்கறவங்களுக்கு இருக்கிறார் இல்லன்னு நினைக்கறவங்களுக்கு இல்ல

நீங்க ஆத்திகனா நாத்திகனா?
நான்  முதல்ல நல்ல தகப்பன் நல்ல கணவன் நல்ல து‌ணைவன்

போலி டிக்ஸ் பேட்டி



சென்ற ஆட்சியாளர்கள்  மீது நிறைய கைது நடக்குதே பழி வாங்கும் நடவடிக்கையா?

நிச்சயமா இல்லை மைனாரிட்டி திமுக அரசு பண்ண மெஜாரிட்டி தவறுகள் ஊழல், நில அபகரிப்பு, ரவுடியிசம். ‌ அதை சட்டப்படிதான் என்னாலான  என் ‌தலைமையிலான எனது அரசு நடவடிக்கை எடுக்கிறது

பால் விலை பஸ் கட்டணம்  எல்லாம் உயர்த்திட்டீங்களே-??

போன ஆட்சில தீயசக்தியான திமுகவை ஆட்சில உட்கார வைச்சதுக்கு
தமிழக மக்களுக்கு நான் தர்ற சிறு தண்டனை. இப்பதான் எனக்கு நிம்மதியாயிருக்கு ஆத்திரம் அடங்கியிருக்கு

அவங்க கட்டின எல்லா பில்டிங்கையும் ஆஸ்பிடலா மாத்தியிருக்கீங்களே??

அவர் தனக்கப்புறம் தன் வீட்ட ஆஸ்பிடலா எழுதி தர்றதா சொன்னார் நான் அவங்க ஆசையத்தான் நிறைவேத்தியிருக்கேன் .அதான்  அவங்க கட்டின பில்டிங் எல்லாத்தையுமே ஆஸ்பிடலா மாத்தியிருக்கேன்


மேம்பாலத்த என்ன ‌பண்ணப்போறீங்க மேடம்-??

மேம்பாலம் மேல இன்‌னொரு மேம்பாலம் வரும் அப்ப கீழ் பாலம்  விபத்து அவசர சிகிச்சைஆஸ்பிடலா செயல்படும்


149 தடவ ஓபி அடிச்சிட்டு ஒருவழியா பெங்களுர் கோர்ட் போனீங்க ஒரு ‌வேளை தீர்ப்பு பாதகமா வந்தா?
‌‌
அதான் ஓபி இருக்காரே


தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் என்னவல்லாம் செய்ய இருக்கீங்க?

அதை கொடநாட்டுல போயிதான் யோசிக்கனும்.


என்முகத்தில்
முழிக்கவே கூடாது  என்று
மு‌‌டிவாக இருக்கிறாய்
என்னை பார்க்கக்கூடாதுஎன்று
நீ நினைக்கும் தருணங்களில்
உன்
மனதுக்குள்
மைக்ரோ
வினா ‌டி வந்து போகும்
என்
பிம்பத்தை
என்ன  செய்வதாய் உத்தேசம்??

என்ன கொடுமை சார் ?

                   20   நபர்கள்  வேலைசெய்யும்  எங்கள் அலுவலகதில்   ௨ கழிப்பறை உள்ளது .                      
கிளீன்    செய்ய வருவது ஒரு பெண் .  பெண்  பாத்திரம் கழுவலாம். பாத்ரூம் கழுவுவது என்பது  பெண் ஆளும் நாட்டில் இந்த காலத்தில் கொடுமை . மனித கழிவை மனிதனே அள்ளுவது  குறித்து  அதரக் கெதிராக   சமூக ஆர்வலர்கள்  இன்னும் போராடி வருகிறார்கள் .ஆனால் இந்த சமூக கொடுமைக்கு யார் காரணம் ?
கல்வியறிவு  இல்லாததே .
50 .வருடம் முன் யார் யார்( பாரதியார் பெரியார்) பெண் கல்வி வேண்டி வலியுறுத்தி வந்தாலும் ,இன்னும் மக்கள் மாறவில்லை .இவ்வளவு பீல் பண்னுவது அந்த பெண்ணின் வயது 25  க்குள்  என்பதால்தான்  (அட  தப்பா யோசிக்காதிங்க சின்ன வயதிலேயே  இந்த கொடுமையா? என்றுதான் .)



ஒலிப்பதிவில் குரலற்றவனின் குரல்




நீ
பேசி ச்செல்லும்
எண்ணற்ற சொற்களில்
உன் இதயத்திலிருந்து வரும்
எனக்கான சொல்லை தேடுகிறேன்
ஜன கூட்டத்தில் தாயை தேடும் சிறுவனைப்போல .....





வானத்தைப் போல  நான்
மையம் கொண்ட புயல் சின்னமாய் நீ
அடிக்கடி என்னை
அழ வைத்துப் பார்க்கிறாய்........

கவிதை


உன் கடும்  கோபத்துக்கு  ஆளான  நான்
உன் அரவ ணைப்பையே  நாடுகிறேன்

அடி வாங்கினாலும்
திரும்ப அம்மாவையே
தூக்கச் சொல்லி  
அடம்பிடிக்கும்   ஒரு
குழந்தை யைப்போல