அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

க. ப. அறவாணன் எழுதிய "தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? " என்ற புத்தகத்திலிருந்து


                இந்தியாவில் அதிலும் குறிப்பாகத்தமிழ்நாட்டில் அரசு மாற்றங்களும்  அரசியல் மாற்றங்களும்
நிகழ்ந்த போது  பொதுவாக மக்களுக்குத் தெரியவில்லை. தெரியப்படுத்தப்படவுமில்லை, மக்களும்
‌தெரிந்து கொள்ளமுனைவதுமில்லை,
                  அயல்நாட்டார் படையெடுக்க விரும்பும் போதும் ஆட்சியைக் கைப்பற்ற எண்ணும் போதும் மக்கள்  தடுப்பார்களே, தொடர்ந்து மக்கள் கிளர்ச்சி தங்கட்கு இடையூராக இருக்குமே என்ற கவலையே அயல்நாட்டவர்க்கு இல்லாமல் செய்தது.  அரசர்கள் தம் கீழ் உள்ள நாட்டையும் நாட்டுப்பகுதியையும் அங்கு வாழும் பொதுமக்கள் ஒப்புதல்  எதுவுமின்றிக் குத்தகைக்கு விடுவதும் , தம் இச்சைக்கு விற்பதும்,     அடமானமாக அயல்நாட்டினரிடம் கடன் பெறுவதும் , நன்கொடையாக வழங்குவதும் , தமிழ்நாட்டில் வழக்கமாக இருந்ததைக் கீழ்வரும் வரலாற்று நிகழ்வுகள் வழி அறியலாம்.

1.தஞ்சையைக் கைப்பற்றி முதன்முதல் ஆண்ட நாயக்க மன்னர்  கேசவ நாயக்கர்( 1549=1572)
இவர் விசயநகர அரசர் அச்சுத தேவரின்   மனைவி இராணி திருமலைஅம்மையின் தங்கை மூர்த்தி அம்மையை மணந்து கொண்டவர், அப்போது  கேசவநாயக்கருக்கு தஞ்சைப்பகுதி வரதட்சணையாக தரப்பட்டதாம்.

2. தஞ்சை மராத்திய அர‌சர் சாஜி (1684=1712)மைசூர் மன்னரான சிக்க தேவராயருக்குப் பெங்களூரை மூன்று இலட்சரூபாய்க்கு விற்றுவிட்டார்.

3.பிரதாப்சிங் (1739=1763) ஆட்சியில் இருந்தபோது  தஞ்சைப்பகுதியான கா‌ரைக்காலைப்் பிரஞ்சுக்காரர்களுக்கு நன்கொடையாக வழங்கினான்.

4.தற்போது ள்ள புனித ஜார்ஜ் கோட்டையை 1639 ல் நாயக்க மன்னன் மூன்றாம் வேங்கடவனிடமிருந்து
ஆ்ங்கிலேயர் குத்தகைக்கு வாங்கிகட்டிக்கொண்டதாகும் பின் அதுவே நிலையான சொத்தாயிற்று அவர்களுக்கு.

5.தமிழர் பொருட்படுத்துவதற் குரியவர் அல்ல என்ற போக்கு விடுதலை அடைந்த பின்னும் ‌ தொடர்ந்தது,
1954ல் புதுவை பிரான்சிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்க  நேருவிற்கும் பிர‌‌ான்சிற்கும்1956  ல் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இவ்வொப்பந்தம்  கையெழுத்தாகும்போது அக்காலப் புதுவை முதல்வர் குபேர் அழைக்கப்படவுமில்‌ைலை. வேறு புதுவைத் தமிழ்ப்பிரநிதிகளும் கலந்து ஆலோசிக்கப்படவுமில்லை. தமிழுக்‌கோ தமிழருக்‌கோ உரியபாதுகாப்புச்‌ ‌‌செய்யப்படவி‌ல்லை

6. தமிழகத்தின்     ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு பிரதமர்  இந்திராவால் 1974 இல் இலங்கைக்கு தாரைவார்த்து க் கொடுக்கப்பட்டது, அப்போதைய தமிழக அரசுடனோ முதலமைச்சருடனோ கலந்தா‌‌‌லோசிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை: