அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

‌தோற்றதலைவரிடம் ஒரு பேட்டி


 உங்க கட்சி இந்த தேர்தல்ல படுதோல்வி அடைஞ்சிருக்கே அதபத்தி--
  
           உங்க கேள்வியி்லேயே பதில் இருக்கு எஙக எம்்எல்ஏ எம்பி எல்லாம் கடந்த கழகஆட்சில ஒக்காராம துரங்காம ஓடிஓடி உழைத்திருக்கிறாங்க அதற்குததான் படுத்து ரெஸ்ட் எடுக்கட்டும்னு கடவுள் இந்த ‌கௌரவ  படு தோல்விய கொடுத்திருக்கார்

நீங்க பகுத்தறிவுவாதியாச்சே அப்ப கடவுள நம்பறீங்களா-?
நீங்க நம்பறீங்கல்ல அதற்காகத்தான் இந்த பதில்

நான் சாமி கும்பிடுறது ‌உங்க புத்திக்கு எப்படி ‌‌‌‌‌‌தெரியும்-?
அதான் ஒங்க ‌நெத்தியே சொல்லுதே

நில அபகரிப்பு புகார்ல நிறைய பேர் உள்ள போறாங்களே-?
    2000 வருசத்துக்கு முன்னால இமயமலைய தாண்டி  நம்ம நாட்டுக்குள்ள வந்தவர்தான் அலெக்சாண்டர்.ஆப்கானிஸ்தானிலிருந்து முகம்மது கஜினி ,டெல்லிய பிடிச்சார். வடக்கிலிருந்து தெற்க‌ ‌‌மொகலாயமன்னர்கள் படையெடுத்து ஆண்டாஙக இதெல்லாம் எதற்கு நிலத்துக்காகத்தான்.  அரசர்கள் அந்தக்காலத்துல பண்ணா வெற்றிச்சரித்தரம். நாங்க பண்ணா நில அபகரிப்பு கேஸ் போடறாங்க. நாங்க  ‌‌ வெறும் கிரவுண்ட் கணக்குலதான் பண்‌றோம் அதக்
கூட  தப்புன்னா என்ன ஜனநாயகம்?

சொத்துக்குவிப்பு வழக்குல நிறையபேர் உள்ள போ‌றாங்களே ‌?
 

என் காலத்துக்கு முன்ன சுதந்திரத்துக்காக ‌சிறைக்கு போனாங்க. எங்க காலத்துல மிசா, மொழிப்பேரர் ,இந்தி ‌எதிர்ப்புன்னு சிறைக்கு போனோம். இப்ப அப்படி சொல்லிக்கறமாதிரி ‌கௌ‌ரவமான எந்த நல்ல காரணமும் இந்தத் ‌ ‌தலைமுறை அரசியல்வாதிக்கு இல்லியே . இப்படியாவது சிறை அனுபவம் கிடைக்குதே   சொத்துக்குவிப்பு வழக்குல ‌சிறைக்குப்போனாலும்
போயிட்டு வந்தபிறகு  ‌  வழக்கு போயிடும் சொத்து மிஞ்சிடுதே. அதனால எதற்கும் அஞ்சமாட்டார்கள் எங்கள் கழகக்கண்மனிகள்


இப்ப நிறையபேர் ஒங்க கட்சில இருந்து ஆளுங்கட்சிக்கு தாவிட்டாங்களே வருத்தமாயில்லையா?

   நிச்சயமா இல்ல ‌ ஏன்னா அவங்கள அனுப்பி வைச்சதே நான்தான் அதான் ராசதந்திரம். அவங்க ஒரு ஒற்றர் படைமாதிரி  .5 வருசத்திற்கு அப்புறம் அவங்க தாய்க்கழகத்துக்கே திரும்பி வந்துடுவாங்க


இப்ப போனதே தாய்க்ழகத்துக்குத்தானே?
இங்க தான் நீங்க  தமிழ புரிஞ்சிக்கனும். அம்மா தாய் உறவுமுறையில அர்த்தம் ஒண்ணுதான். ஆனா அரசியல்ல அர்த்தம் மாறுது . தாய்க்கழகம்னு சொன்னது எங்க கட்சியத்தான்.

உங்களுக்குப்பிறகு கட்சிதலைமை யாருக்கு? அடுத்த தலைவர் யார்?

 அத பொதுக்குழுதான் கூடி முடிவெடுக்கும் .

‌‌பொதுக்குழுல முக்கால் வாசிப்பேர் உள்ள போயிட்டாங்ளே?

யோவ் பொதுக்குழு இல்லன்னா ஒரு புதுக்குழு கூடும்யா

கடைசியா ஒரு கேள்வி
கடவுள் இருக்கிறாரா?

இருக்கிறார்னு நினைக்கறவங்களுக்கு இருக்கிறார் இல்லன்னு நினைக்கறவங்களுக்கு இல்ல

நீங்க ஆத்திகனா நாத்திகனா?
நான்  முதல்ல நல்ல தகப்பன் நல்ல கணவன் நல்ல து‌ணைவன்

2 கருத்துகள்:

கோவை நேரம் சொன்னது…

அருமை....////2000 வருசத்துக்கு முன்னால இமயமலைய தாண்டி நம்ம நாட்டுக்குள்ள வந்தவர்தான் அலெக்சாண்டர்.ஆப்கானிஸ்தானிலிருந்து முகம்மது கஜினி ,டெல்லிய பிடிச்சார் அப்பறம் வடக்கிலிருந்து தெற்க‌ ‌‌மொகலாயமன்னர்கள் படையெடுத்து ஆண்டாஙக இதெல்லாம் எதற்கு நிலத்துக்காகத்தான் அரசர்கள் அந்தக்காலத்துல பண்ணா வெற்றிச்சரித்தரம் நாங்க பண்ணா கேஸ் போடறாங்க. நாங்க ‌‌ வெறும் கிரவுண்ட் கணக்குலதான் பண்‌றோம் அதக்
கூட தப்புன்னா என்ன ஜனநாயகம்?////

இதை கேட்டா கலைஞர் கூட சந்தோஷ படுவார் ..ஹி..ஹி ..ஹி

கோவை நேரம் சொன்னது…

நிறைய மிஸ்டேக் இருக்கிறது .நல்ல ஒரு தமிழ் எழுதியில் எழுதுங்கள்.