அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

க. ப. அறவாணன் எழுதிய "தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? " என்ற புத்தகத்திலிருந்து


தமிழன் மதத்தாலும்  சாதியாலும் கட்சி அடிப்படையிலும் வர்க்கத்தினராகவும் பிரிந்தும் பகைத்தும் இருக்கின்றனர்  எக்காலத்திலும் தமிழராக ஒன்றுதிரண்டது இல்லை

இன்றைய தமிழர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்

1.அப்பாவித்தமிழர்கள்  /    தண்ணீர்ப்பாம்பு வகையினர் 60% 
        
         இவர்கள் களிமண்ணைப்போன்றவர்கள் , தமக்கென்று நிலையான எந்தக்கருத்தும் இல்லாதவர்கள்.
கடவுள் கர்மா முற்பிறவி என முட்டாளாக நம்பும்  அரசியல் மத சாதித் தலைவர்களை ப் பெரிதும் 
சார்ந்திருப்பவர்கள். திரைப்படம் மயக்கும் பேச்சு ,பணம் இவற்றால் இவர்களை எளிதாக வசப்படுத்தமுடியும்

2. பாவித்தமிழர்கள் =நாகப்பாம்பு வகையினர் 11%

         மற்றவர்களை அழித்து வாழும் கொடியகுணமுடையவர்கள் பழிபாவத்திற்கு அஞ்சாதவர்கள்
தம் கையிலே செல்வமும்  செல்வாக்கும் இருக்குமாறு பார்த்துக்கொள்பவர்கள்.

3,இரண்டும் கெட்டான் தமிழர்கள் = தவளை வகையினர் 20%

       தவளை  நீரிலும் நிலத்திலும் வாழ்பதுபோல் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும்  இருப்பார்கள், நிலையான கொள்கையில்லாதவர்கள்.இங்குமங்கும் தாவிக்கொண்டிருப்பர் , நம்பிக்கைக்கு உரியவர் அல்லர்.

4. நல்ல தமிழர்கள் = கோயில்யானை வகையினர் 9%

       தன்னிடம் வலிமைவாய்ந்த இரண்டு தந்தங்கள் ,ஆற்றல் மிக்க துதிக்கை, மிகப்‌பெரிய நான்கு கால்கள், பருத்த உடல் கூ‌ரிய கண்கள் இருந்தும் தன்னைவிடப் பன்மடங்கு சிறியபாகனுக்கும்  அவன் கையிலுள்ள சிறு குச்சிக்கு ய‌ானை அடங்கிக்கிடப்பது போல் நல்லவர்களும் தம் ஆற்றல் அறியாது இருப்பவர்கள்


கருத்துகள் இல்லை: