அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

என்முகத்தில்
முழிக்கவே கூடாது  என்று
மு‌‌டிவாக இருக்கிறாய்
என்னை பார்க்கக்கூடாதுஎன்று
நீ நினைக்கும் தருணங்களில்
உன்
மனதுக்குள்
மைக்ரோ
வினா ‌டி வந்து போகும்
என்
பிம்பத்தை
என்ன  செய்வதாய் உத்தேசம்??

என்ன கொடுமை சார் ?

                   20   நபர்கள்  வேலைசெய்யும்  எங்கள் அலுவலகதில்   ௨ கழிப்பறை உள்ளது .                      
கிளீன்    செய்ய வருவது ஒரு பெண் .  பெண்  பாத்திரம் கழுவலாம். பாத்ரூம் கழுவுவது என்பது  பெண் ஆளும் நாட்டில் இந்த காலத்தில் கொடுமை . மனித கழிவை மனிதனே அள்ளுவது  குறித்து  அதரக் கெதிராக   சமூக ஆர்வலர்கள்  இன்னும் போராடி வருகிறார்கள் .ஆனால் இந்த சமூக கொடுமைக்கு யார் காரணம் ?
கல்வியறிவு  இல்லாததே .
50 .வருடம் முன் யார் யார்( பாரதியார் பெரியார்) பெண் கல்வி வேண்டி வலியுறுத்தி வந்தாலும் ,இன்னும் மக்கள் மாறவில்லை .இவ்வளவு பீல் பண்னுவது அந்த பெண்ணின் வயது 25  க்குள்  என்பதால்தான்  (அட  தப்பா யோசிக்காதிங்க சின்ன வயதிலேயே  இந்த கொடுமையா? என்றுதான் .)



ஒலிப்பதிவில் குரலற்றவனின் குரல்




நீ
பேசி ச்செல்லும்
எண்ணற்ற சொற்களில்
உன் இதயத்திலிருந்து வரும்
எனக்கான சொல்லை தேடுகிறேன்
ஜன கூட்டத்தில் தாயை தேடும் சிறுவனைப்போல .....





வானத்தைப் போல  நான்
மையம் கொண்ட புயல் சின்னமாய் நீ
அடிக்கடி என்னை
அழ வைத்துப் பார்க்கிறாய்........

கவிதை


உன் கடும்  கோபத்துக்கு  ஆளான  நான்
உன் அரவ ணைப்பையே  நாடுகிறேன்

அடி வாங்கினாலும்
திரும்ப அம்மாவையே
தூக்கச் சொல்லி  
அடம்பிடிக்கும்   ஒரு
குழந்தை யைப்போல