அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

மைக்‌‌ரோ கதை 1 - அலர்ட்

"

                                                             கதை   1
                                                                    
                                    
                  காலையில் எழுந்ததும் மனைவி  காபிக்கு ‌பதில் ,ஒரு குண்டைத்துாக்கி‌‌ப்போட்டாள். ‌கேஸ் தீர்ந்து விட்டதாம் ஆனால் புக் பண்ணலியாம் ‌எவ்வளவு கேர்லெஸ். பிடித்து திட்டி தீர்த்துவிட்டேன். 
     'தத்தி தத்தி இப்படியா ஒரு பொம்பள இருப்பா அசமந்தம் அசமந்தம் வீட்ட பாக்குற நீதான் எல்லாத்தையும் கவனமா  பாக்கனும்'  சே .  இன்டக்சன் ஸ்டவ் இருந்ததால தப்பிச்சாச்சு.
       இப்படித்தான் போனவாரம்  கு‌டிதண்ணிக்கு சொல்லல  நைட் குடிக்கதண்ணி  இல்ல கடைக்காரன் காலைல பத்து  மணிக்குதான் வருவான். அதுவரைக்கும்  கார்ப்பரேசன் தண்ணிய சுடு பண்ணி ‌குளோரினோட குடிக்க வேண்டியதாப்போச்சு. இப்படி அவ கவனக்குறைவுக்கு அளவேயில்லாம போயிடுச்சு. திநகர் போனமாசம் பர்சேஸ் பண்ண போனப்ப மழை ‌‌‌பெய்துதேன்னு குடை எடுத்துட்டு போனோம், வரும்போது குடையக்கானோம். எந்த கடையில விட்டுட்டு வந்தாளோ , வண்டியில ஒக்காந்துட்டு வர்றப்போ பைய தவறி விட்டுடுவாளோன்னு திரும்பி திரும்பி பாத்துட்டே வரவேண்டியதாயிருக்கு .ரேசன் கடைக்கு போறேன்னு போயிட்டு ஒடனே திரும்பி வர்றா, ஏன்னா கார்ட வீட்டுலயே வச்சிட்டுபோயிட்டேன்கறா.
    ம் எப்படித்தான் இவகூட குப்ப கொட்டறதோ என்று புலம்பிக்கொண்டே என்  ‌டுவீலரை எடுத்துக்கொண்டு கிளம்பி‌னேன். ஆபிஸ் நேரம் ஆகிவிட்டது,   

               டிராபிக் நிறைந்த சாலையில் தவழ்ந்து சென்றுகொண்டிருந்‌‌‌‌தேன்.  திநகர்  பனகல் பார்க் அருகில் ட்ராபிக் போலீஸ் நின்று கொண்டு   எல்லா வண்டிகளையும்  செக் பண்ண ,இவனுகளுக்கு வேற வேலையே இல்ல .காலங்காத்தால ஆபிஸ்  போறப்ப டார்ச்சர் ‌‌பண்றானுங்க ; சரி நமக்கு  என்ன பிரச்சனை  கவசம் போட்டிருக்கோம் ; நமக்‌கென்ன பயம் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த பாழாய்ப்போன சின்சியர் போலீஸ்கான்ஸ்டபிள் ஏதோ  தீவிரவாதியை பிடித்து நிறுத்துவதுபோல் நிறுத்தினான். பேப்பர்களைக்காண்பித்தேன். லைசென்ஸ் காண்பித்தேன் எல்லாம் சரியாயிருந்தது .

 "இன்ஸூரன்ஸ் ரினிவல் பண்ணலயெ"- - கான்ஸ்டபிள்

 "சார் நல்லா பாருங்க சார் கரெக்டா கட்டிட்டு வர்றன்",  -- நான்

"ஏம்பா நான் என்ன பொய்யா சொல்றேன் முடிந்து 2 மாசம் ஆயிடுச்சு"

                             பேப்பரை என்னிடம்  நீட்டி வெற்றிபெருமிதத்தோடு ‌ கொலை கேஸில் முக்கிய தடயம் கிடைத்தது போல் என்னைப்பார்க்க . பேப்பரை வாங்கிப்பார்த்தேன். இன்ஸூரன்ஸ் முடிந்து காலாவதியாகிவிட்டுருந்தது எப்படி இவ்வளோ அலட்சியமா இருந்திருக்‌கிறேன். எனக்கே அவமானமாகப்போய்விட்டது .எல்லா விசயத்திலும் அலர்ட்டாக இருப்பவன் நானே மிஸ் பண்ணிவிட்டேன் சே, யானைக்கும் அடிசறுக்கும் என்பது இதுதா‌னோ? டிராபிக் எஸ்ஐயிடம் பைனைக்கட்டிவிட்டு என்பைக்கை எடுத்துகிளம்பினேன்.
     அப்போது என் அப்பாவி மனைவியின் தத்தி முகம் என் மனதில் வந்துபோவதை தவிர்க்க இயலவில்லை.

கருத்துகள் இல்லை: