அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

சகுனம்





சகுனம்


குறுக்கே வந்தது பூனை
சகுனம் சரியில்லை .
அநியாயமாய் வண்டியில்
அடிபட்டுச்செத்தது.

கவிதை

அதிகாலையில்
பூமிக்கு ஒத்தடம்,
என்னவள்
"வாக்கிங்" செல்கிறாள் .













காற்றே மெதுவாய் வீசு!
மறைந்துவிடப்போகிறது
மணலில்
அவளின் பாதச்சுவடுகள்!






கோவில் சென்றும்
கடவுளை வழிபடமுடியவில்லை!
மனைவியை
பாதுகாத்து
பத்திரமாய் கூட்டிச்செல்வதிலேயே மனம் இருந்ததால் ...










அவள்
அழுத்தமாகத்தான் முத்தமிட்டாள்
ஆனாலும்
இனிக்கவில்லை.
லிப்ஸ்டிக் பூசிய இதழ்கள்!








 எத்தனைமுறை
விசிலடித்தும்
கோபமே வரவில்லை
நம் வீட்டு பெண்களுக்கு !
"குக்கரின்மேல் "




அடிக்கடி ஏமாந்தேன்
நீ சிரிப்பதாய் நம்பி ..
கண்டக்ட்டர் பையை
குலுக்கையில் ...



கிள்ளிய பருக்கள்
சொல்லியது
உன்மெல்
நான் வைத்த காதலை!



இத்தனை மழை பெய்து
என்ன பயன் ?
உன்னோடு
ஒரு குடையில் நடக்காதபோது!
உன்னை
மறக்க
நினைத்தாலும்
என் ஜன்னலோர
பயணங்கள்
ஞாபகப்படுத்திவிடுகின்றன !

கடல்கடந்து காதலி

      
    நியூஸ பார்த்திங்களா ?  கீழேகிடந்த ‌பேப்பரைக்காட்டி பிரவீன்ராஜ் ச‌ிரித்தான்.

 ''நானும் அசொக்கும் நண்பர்கள் மட்டுமே; கண்டிப்பாக காதல் கிடையாது .முழுக்க முழுக்க  அப்பட்டமான  வதந்தி, அவரை காதலிக்க நான் முட்டாள் கிடையாது. இனி அவரின் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொள்வேன்;
‌தொழிலில் முன்னேறுவது மட்டுமே ‌என் நோக்கம். தயவுசெய்து இந்த ‌பொய்ச்செய்தியை நம்பவேண்டாம்''  நடிகை யாமினி .

    " சியர்ஸ் "  ---
எதி‌ரில் நண்பர்கள் மற்றும் அவன் எடுபிடிகள். கைகளில் பாரின் ஸ்காட்ச்  . சந்தோசத்தில் மிதந்தான் ,பார்ட்டிவைத்து கொண்டாடினான்.

அசோக்குமார் -
5 தொடர்உறிட் கொடுத்த தமிழ் உறீரோ . பாக்ஸ் ஆபிஸில் ‌தொடர்ந்து இடம்பிடித்தவன். இன்றைய இளையதலைமுறை இயக்குனர்களின் மோஸ்ட் வாண்டட் யுத் உறீ‌‌ரோ; டிஸ்டிபூட்டர்களின் நம்பிக்கை நட்சத்திரம்; தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நாயகன்; பள்ளி மாணவிகளின் கனவு தேவன்  மற்றும் ஆன்ட்டிகளின்  ரகசிய சினேகிதன். எத்திராஜ், வைஸ்ணவா, ஸ்டெல்லா மேரீஸின் துாக்கம்‌ ‌‌கெடுப்பவன் . 

யாமினி--
 ஐ டிசிட்டியிலிருந்து வந்த  உைற டெக் பிகர்;  இன்றைய இளசுகளின் எனர்ஜி ; பெரிசுகளின் வயாக்ரா.
 சென்ற ஆண்டில் அதிகமான நபர்களால் வாசிக்கப்பட்டது யாமினியின் டிவிட்டர் என்றது ஒரு வலைத்தளம். கூகிளால் அதிகம் தேடப்பபடுபவள்;  அதிகமாய் யூடிப்பால் பார்க்கப்படும், டவுன் லோட்  செய்யப்படும் நாயகி .

அசோக்குமார்  ‌தொடர்ந்து கொடுத்த சூப்பர்உறி்ட் படங்களில் மூன்றில் யாமினி உறீரோயின், எனவே  ‌‌‌‌வெற்றிக்கு அவர்களின் ராசி. கெமிஸ்ட்ரி என்று சென்டிமெண்ட் முலாம் பூசியது கோலிவுட். 
         சக போட்டி நடிகனான பிரவீன்ராஜ்  தான்  நடித்த 6 படங்களில் 4 ‌அட்டர் பிளாப். 2  பிலவ் ஆவரேஜ் கொடுத்த  ஒரு வாரிசு நடிகன் . இவன் படத்திற்கு யாமினி கால்சீட் தரமறுத்தது, அவன்  கோபத்தை கிளறி அசோக்குமார்மீதும் பொறாமைதீயை வளர்த்தது. இதற்காக  அசோக்குமாருக்கும் யாமினிக்கும் காதல் என்று வதந்தியை திட்டமிட்டு ‌பிரஸ்ஸிடம் பணம் கொடுத்து பரப்பிவிட்டான். கிசுகிசு  பரவியது; இவர்களின் அட்டை படத்துடன்  வெளிவந்த    வாரப்பத்தி்ரிக்கைகளின் சர்க்குலேசன் எகிறியது .
          அத்தனை பேப்பர்களிலும்    சினிமாநியூஸ் சேனல்களிலும் இருவரும் திருமணம் செய்யப்போவதாய்   ப்ளாஸ் ஆயின .  ‌‌ரொம்பவே  அப்செட் ஆனாள் யாமினி . இப்போதுதான் கஸ்டப்பட்டு 1 கோடி சம்பளத்தை நெருங்கியிருக்கிறோம் இன்னும் 4 ,5 வருடங்கள் 4 ‌மொழியிலும்   கலக்கி கல்லா கட்ட ‌வேண்டியிருக்கிறது. பாலிவுட் கனவும் பாக்கிஇருக்கிறது. இந்தநேரத்தில்  இப்படி வந்தால் மார்க்கெட் பாதிக்கப்படுமே என்று உடனடியாக  காரசாரமாக ஒரு அறிக்கை  விட்டாள் ,
 அதுதான் மேலே பார்த்தது
இதற்கு பதிலாக இன்னொரு அறிக்கை அடுத்தநாள் ‌ அசோக்குமாரிடம் இருந்து
         ''நான் யாமினியைக்காதலிக்கவும் இல்லை அவர்களோடு எனக்கு எந்த நட்பும் காதலும் இல்லை. திருமணம் அப்பா அம்மா பார்க்கும் பெண்னோடு மட்டும்தான். அது ஒரு புனிதமான உறவு. கண்டிப்பாக ஒரு நடிகையை திருமணம்நடிகையை திருமணம் செய்ய நான் பைத்தியக்காரன் இல்லை.  இந்தியாவில் அந்தளவு பெண் பஞ்சம் இல்லை; என் திருமணம் ஒரு குடும்பப் பெண்ணோடுதான். பீல்டில் நடிகைகள் நிலை பற்றி நன்றாகவே நாலும் தெரிந்தவன்,எனவே வதந்திகளை நம்பவேண்டாம். இப்போதைக்கு திருமணமும் இல்லை  முழுகவனமும் நடிப்பில்தான் ."

கோலிவுட் முழுக்க இந்த அ‌றிக்கைப்போர் பற்றி பேச்சு
பிரவீன்ராஜ்  குதித்தான்.  இந்த வாரத்திலேயே இரன்டாவது பார்ட்டி நண்பர்களுக்கு  த‌ண்ணியில் மிதந்த அந்தநேரம் .   யாமினி தரப்பில் மீண்டும்  அனல்கக்கும்  அடுத்த அறிக்கை.

  ''ந‌டிகை என்றால் கேவலமா? நாங்கள் குடும்பத்திலிருந்து வரவில்லையா? ‌நடிகைகளை இனியும் தவறாக பேசினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறேன் ,மானநஸ்ட வழக்கு போடவும் தயங்கமாட்டேன்" என்று அடுத்த குண்டு ஒன்றை போட்டாள் .

இந்தளவு காட்டமாக எந்த நடிகர் நடி‌ைகயும் அறிக்கையால் அடித்துக்கொண்டதில்லை . கோடம்பாக்கமே இந்த விசயத்தை  சற்று அதிர்ச்சியோடுதான் பார்த்தது;  நடிகர் சங்கம் இப்பிரச்சனையை கவலையோடுபார்த்து  செய்வதறியாது கையைப்பிசைந்தது. சிலதினங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து இயல்புநிலைக்கு கோலிவுட் திரும்பியது;  பத்திரிக்கைகள் பால் விலையேற்றத்தைப்பற்றியும் முல்லைப்பெரியாறு பற்றியும்  ‌பேச ஆரம்பித்தன. அதற்குபின்  அவர்களின் கிசுகிசுக்களுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்தாயிற்று,

ஒரு வாரத்ததிற்குபிறகு பனிபொழியும்  ஒரு அதிகாலை நேரம்; திருவனந்தபு‌‌ரம் ஏர்போர்டிலிருந்து
புறப்பட்ட அந்த சிங்கப்பூர் செல்லும் ‌‌விமானத்தில்   ஊடக யுத்தம் செய்த அசோக்குமார்  அருகில்  தேவதையாய் யாமினி .

"ஏன் திருவனந்தபு‌ரம்   ஏர்போர்ட் வரச்சொன்னிங்க-? "   --- யாமினி . 

"இந்த ஏர்போர்ட்  பொள்ளாச்சி சந்தை மாதிரி  அந்த கும்பல்ல நம்மள யாரும்  கண்டுக்க மாட்டாங்க" அசோக்குமார்

"சரி உன் மேனஜர்கிட்ட நீ என்ன சொல்லிட்டு வந்த ?"

"நான் என் சொந்த ஊருக்கு  ‌போறதவும் வர ஒருவாரமாகும்னு சொல்லிட்டேன்"

''இருந்தாலும்  பிரஸ்ஸூக்கு  இப்படி காட்டமா அறிக்க கொடு்த்துருக்ககூடாது
சாருக்கு குடும்பபெண்தான் இஸ்டமோ ஏன் நாங்க என்ன மேல இருந்து குதிச்சா வந்தோம்?''

''இல்லடா அப்பதானே நம்புவாங்க ‌‌என்னமட்டும் முட்டாள்னு நீ திட்றமாதிரி

நானே  எழுதிக்கலயா?''

"அடுத்த படம் நீங்களே டைரக்சன் பண்ணிடுவீங்க போல...''
கிண்டலடித்த  யாமினி   .‌ அசோக்கின் தலையில்  செல்லமாய்  கொட்டி  கைகளுடன் கேரர்த்தபடி தோளில் சாய்ந்தாள்.. நட்சத்திர காதலர்களை சுமந்த அந்தசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்   விண்ணில் விரைந்து கொண்டிருந்தது. சிங்கப்பூர் சென்று . அங்கிருந்து பிரான்ஸ் போக பிளான்.
எல்லாம் நல்லபடியாக முடிந்ததிருப்தியில் இருந்தவர்களுக்கு யா‌‌‌ரோ தம்மை உற்றுப்பார்ப்பதுபோல்ஒரு உணர்வு .
           சிறு அதிர்ச்சியோடு திரும்பிப்பார்த்தான் அசோக்.  எதிர் வரிசை இருக்கையில் மடியில் லேப்டாப்புடன் பிரபல தினமுரசு பத்திரிக்கையின் சினிமா நிருபர் ‌ பொன் .கார்த்திக்கேயன்  விசமமாய் சிரித்தபடி .
      லேப்டாப்புடன்   இணைந்திருந்த  அந்த டேட்டாகார்டில்  அதிர்வலைகள் போல் ஒளிர்ந்த சிறு ஒளிக்கீற்றிலிருந்து தெரிந்தது  அவன் ஏதோ ஒரு ‌தகவலை ‌அனுப்பிக்கொண்டிருக்கிறான் என்று.

   

கறுப்புநட்சத்திரம் காந்திமதியம்மா




                    ஒருவாரகாலமாகவே அவங்களுக்கு ஒரு போன் ‌‌பண்ணனும் என்று நினைத்திருந்தேன்,  என்  மனைவியும் திடீரென்று ஒருநாள் எப்படிங்க இருக்காங்க அம்மா ரொம்பஇளைச்சிப்போயிட்டாங்க ,( ‌டிவியில் பார்த்துவிட்டு) வீட்டுக்கு கூப்பிட்டாங்களே ஒருநாள் போய்வ‌‌ரல‌ாங்க என்றாள். ஏனெனில் இரண்டொருமுறை போனில் பேசும் போது மனைவியிடம் கொடுப்பா என்று பேசியிருக்கிறார்கள்.  ஒரு நெருங்கிய உறவினர் போல உரி‌மையுடன்  பேசுவார்.

            ''யாருடிஇவ சினிமா உலகம் புரியாதவளா இருக்க  அதல்லாம் ஜஸ்ட் ஒரு பார்மலிட்டிக்காக  கூப்பிடுவாங்க ஒடனே போயிடுனுமா ? ''
            
               எனக்கும் தொழில்முறை நட்புதானே தவிர  ‌‌ரொம்பவும்  அந்நியோன்யம் கிடையாது.ஆனாலும் பாசத்துடன் பேசுவார்.வாழ்வின் இறுதி நாட்களில் ரொம்பவே உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் காயம்பட்டிருந்தது அவர்கள் பேச்சினுாடே தெரிந்தது. ‌கடைசியாக எங்கள் சீரியலில் நடித்தவர்,  உடல்நிலைமிகவும்மோசமானதால் திடீரென நிறுத்தப்பட்டது அவர்கள் கேரக்டர். சில வாரங்கள் கடந்தது. எனக்கும் மனதைஅரித்துக்கொண்டிருந்தது  ஒரு போன் பண்ணியாவது பேசனும் என்று.
             ஒரு வழக்கமான சினிமாக்காரன் போல் நாமும் இருக்கக்ககூடாது என்றே நினைத்திருந்தேன், ஏ‌‌‌னெனில் என் திருமணம் முடிந்து சென்னை  வந்ததும் வீட்டுக்கு வந்து ஆசிர்வதித்தவர். ஒருமுறை வெளியூர் கோவில் சென்றுவந்தபோது ஒரு விளக்கு வாங்கிதந்தார்கள் அது இன்றும் என் வீட்டு சாமிபடம்முன் நின்று  ஒளிர்கிறது. ஒருமுறை  காட்சிக்காக பழ‌‌மொழிகள் கேட்டார்கள் என்பதற்காக  ஆயிரம் பழ‌மொழிகள் என்ற புத்தகம் வாங்கி இரவு போனில் சொல்ல உடனே  செலக்டிவ்வாக சில பழமொழிகளை  எழுதிவைத்துக்‌கொண்டார்கள் . அதை எழுதும்போது அவர்களின் ஆர்வத்‌தை துடி‌ப்பை என் செவிகளில் உணர்ந்தேன்.  அப்போது மணி ,இ‌‌ரவு  11  உடல்நிலை   மோசமானநிலையிலும் த‌‌‌ானே   டப்பிங் பேசுவேன் என்று பிடிவாதமாய் வருபவர்,   கால்கள் வீங்கி படியேறமுடியாமல் ‌அழுது‌கொண்டே வரும்போது  ஏதோ ஒரு விதத்தில் அவர்களை ‌‌ ‌எல்லோரும் ‌  கொடுமைப்படுத்துவதாய் நினைத்தேன்.
   
                கடந்த சிலமாதங்களாகவே   வீட்டுக்கு வாப்பா ‌என்று உரிமை மற்றும் வாஞ்சையோடு கூப்பிடுவார்கள்.‌எம்புள்ளைங்களோட எடுத்த போட்டோல்லாம் மாட்டிவச்சிருக்கேன் என்று ‌‌வெள்ளந்தியாய் சொல்லுவார். எம்புள்ளங்க என்றது ரஜினி கமல் இருவரையும்தான் . ஒருமுறை ஜேகே யின்   "ஜெயகாந்தனின் சிந்தனைகள்" என்ற புத்தகம் அட்டையில் ஜேகே யின் புகைப்படத்துடன்  என் டேபிள் மீதுஇருந்தது ,அதைக்கண்டதும் எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டே சிறிது ‌நேரம் ‌‌மௌனமானார்கள். கண்களில் ‌நீர்திவளைகள் . நான் பதறிவிட்டேன் .   சில நிமிடங்களுக்குப்பிறகு ''சிங்கம்யா அவர் சிங்கம்யா" என்று மனம் ‌பெருமையாய் பூரிப்பாய் சிந்திய கண்ணீரைத்துடைத்தபடி சொன்னார்கள்,தேவையில்லாமல் ஏதோ அவர்களின் ‌பழைய நினைவுகளை கிளறிவிட்டே‌னோ என்று சங்கடமாயிருந்தது.

                      சீரியலிலிருந்து ஒதுங்கி ஒருசில மாதங்களுக்குப்பிறகு  திடீரென அந்த துயரச் செய்தி வந்தடைந்தது என்செவிகளுக்கு அம்மா இறந்துட்டாங்களாம் என்று .
        அன்று இருந்த வேலைகளை முடித்து சற்று சீக்கிரமாகவே நானும் நண்பரும் வீட்டைநெருங்கியபோது  ‌தண்ணீர் ‌தெளிக்கப்பட்டு ஈரமான தெரு வெறிச்சோடியிருந்தது .அருகில் விசாரித்தபோது எடுத்துட்டுப்போயிட்டாங்க என்றனர்,   ஒருமுறை உசிரோடு இருக்கும்போது வந்திருக்கலாம் என்ற வருத்தம் மனதைக்கவ்வியது. அம்மா முகத்த பார்க்கக்கூடமுடியல  என்றபோது என் நெஞ்சுக்குள் ஏதோ ‌ பாரமாக அழுத்தியது.   அவர்‌களோடு ‌பணிபுரிந்ததே பாக்கியம். அவர்களின் மறைவு திரையுலகில்  ஈடு‌செய்யமுடியாத இழப்பு என்பது வலுவற்ற வார்த்தைகள்.
 
          காமெடி தொடரில் நடித்த கம்பீரமான கலகலப்பான கில்லாடி பாட்டியின் முகம் ஒரு சித்திரமாக நெஞ்சில் பத்திரமாய் இருக்கிறது, அந்தமுகமே கண்முன்னே நிழலாடியது,அந்த ‌கேரக்டரின் வாயிலாக அவர்களை நினைத்துக்கொள்வதே மனதிற்கு சந்தோசத்தைத்தருகிறது ,அந்த பிம்பத்தை ‌‌‌‌அழித்துக்கொள்வதுபோல் அவர்கள்முகத்தைப்பார் க்காமல் போனதும் ஒருவிதத்தில் நல்லதுதான் என்று தோன்றியது.