அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

க. ப. அறவாணன் எழுதிய "தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? " என்ற புத்தகத்திலிருந்து


         ஒரு  இனம் வளர்வதற்கும் , உயர்வதற்கும், தளர்வதற்கும் தாழ்வதற்கும் முதன்மைக்காரணம், அவ்வினத்திற்து அவ்வப்போது  அமையும் தலைமையாகும்.
உதாரணமாக
             முகமது நபி , தலையெடுப்பதற்குமுன் அரேபியரிடையே ஓயாத போர்களும் தமக்குள்ளே ஒருவரை ஒருவர் ‌அழித்துக் கொல்லுதலும்  நடந்து வந்தன. நபி கிபி 570இல் மக்காவில் பிறந்தார்.மதீனாவில் குடிபுகுந்த இடத்தில் மக்கள் நாடோகளாக தம்முள் போரிட்டுக் கொண்டு அழிந்த வண்ணம் இருந்தனர் , அவர்களை மனம் மாற்றிமதம் மாற்றி ஒன்றுபடுத்தினார்.உலகத்தின் சரிபாதியே நபி நாயகம் பக்கம் சேர்ந்தது.
புகழ்பெற்ற மங்கோலிய இனம்13ம் நுாற்றாண்டு வரை பின் நிலையிலேயே இருந்தது.1162ல் பிறந்த செங்கிஸ்கான் தம் குடிமக்கள் அனைவடரையும் ஒன்றுபடுத்தி1206 க்குப்பிறகு  சீனா. ருசியா, மத்திய ஆசியா. பாரசீகம், ஆப்கானிஸ்தான், வடஇந்தியா, போலந்து, ஜெர்மனி, அங்கேரி வரை முன்னேறி வெற்றி கொடிநாட்டினார்,
அலெக்ஸ்ாண்டரால்  கிமு(356=323) கிரேக்க இனம் வளர்ந்தது, பெருமை பெற்றது.
செங்கிஸ்கானால் (1167=1227)மங்கோலிய இனமும், சந்திரகுப்த மௌரியன் (கிபி 320) அசோகன் (கிமு300=232) ஆகியோரால் மெளரிய இனமும், அக்பரால்( கிபி1542=1605)இசுலாமிய இனமும் ஜூலியஸ் சீசரால்(கிமு 100=44) ‌ரோமானிய இனமும் லெனினால் (1870=1924) ருசிய இனமும் மாசெதுங் கால் (1893=1976) சீன இனமும், ‌‌ே‌உறா சி மின் னால் (1890=1969) வியட்நாமிய இனமும் பெருமை பெற்றன.  

                  அவ்வக்காலங்களில் அமையும் தலைவனும், அரசனும் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் அமையும்போது அவர்களுடைய இனமும் வளருகின்றன, நல்ல அரசன் அமைந்து நல்ல அரசமைப்பு வாய்க்க வேண்டும், வாய்க்காவிடில் வளர்ச்சி அமையாது , நம் இந்தியா அதுனுள்  அடங்கிய தமிழ்நாடு இதற்கு சான்று

கருத்துகள் இல்லை: