அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

முத்தம்

நாம் காதலித்தபோது
பயத்தில்
பதட்டத்தில்
நீ கொடுத்த
"பாதி" முத்தம்.
அடுத்தடுத்த
இருட்டு சந்திப்புகளில்
நீ கொடுத்த
"திருட்டு "முத்தம்.
கை பிடித்தபிறகு
அலுவலகம்
கிளம்புகையில்
அவசரகதியில்
நீ கொடுத்த
"ஆசை" முத்தம்.
விடுமுறைதினங்களில்
பதுங்கிப்பின்னால் வந்து
பகலில் நீ கொடுத்த
சமையலறை
"ஜாலி" முத்தம்.
பள்ளியறை இரவுகளில்
காமம் விழித்த தருணங்களில்
கட்டிலில் நீ கொடுத்த
"கெட்டி" முத்தம்.
ஆசையாய்
வளர்த்த
சுப்பிரமணி
இறந்தபோது
நீ கொடுத்த
"ஆறுதல்" முத்தம்.
கடும்காய்ச்சலில்
அவதிப்பட்டபோது
அன்பாய்
நீ கொடுத்த
"எனர்ஜி" முத்தம்.
மிகவும் நேசித்த
பாட்டி இறந்தபோது
பரிவுடன் நீ கொடுத்த
"பாச"முத்தம்.
இண்டர்வியூ செல்ல
பயந்த போது நெளிவு சுளிவு
சொல்லிதந்து ஊக்கப்படுத்தி
நீ கொடுத்த
"உற்சாக "முத்தம்.
ஸ் கூட்டி ஓட்டக்கற்றுக்கொள்ள
முட்டுச்சுவற்றி்ல்
மோதிவிழுந்து
முட்டிதேய
அழுது
எழுந்தபோது
அரவணைத்து
நீ கொடுத்த
"அன்பு"முத்தம்.

இருவருக்கும் விவாதம்முற்றி
வாக்குவாதம் அதிகரித்து
வார்த்தைகளை
ஒதுக்கிவிட்டு
மெளனத்தோடு போராடிய
பொழுதுகளில்
பேசமாட்டோமா என
ஏங்கியிருக்கையில்
தூங்கா
நீண்ட இரவின்
நீட்சியில்
அதிகாலையில்
அரைத்தூக்கத்தில்
இருந்தபோது
என் உச்சி
நெற்றியில்
நீ கொடுத்த
"உயிர்" முத்தம்
முத்தங்களின்
உச்சம்.



"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க
வந்துகிட்டுஇருக்காங்க ரெடியாயிடு"
குரல் கேட்டு
ஆயத்தமானாள்
முகம் தெரியாத
கணவனுடன்
முத்த கனவுகளில்
மிதந்த
முதி்ர்கன்னி.

சீரியல் தோத்தது

* K B யின் ட்ராமாவான ஒரு கூடை பாசத்தில் அம்மா காரக்ட்டர் பேசும் dialoge .இப்போதுஇதுவே நிஜம் ஆயிடும் போலிருக்கிறது .நம் டிவி ஸீரிய்ல்களைப்
பாக்கும்போது! அவற்றின் கதையாடல்களும் புனைவுகளும் வசனங்களும் வக்கிரம் நிறைந்தும் கலாச்சார சீரழிவையுமே கொண்டிருக்கின்றன , அல்லது
முன்னிருத்துகின்றன .ஒருபெண்ணை வானளவு உயர்த்தி தியாகசுடர் போலும் இன்னொரு கேரக்டரை மிகமிக கேவலமாக, பெண்ணே வெறுக்கும் பெண்ணாக,
கொடூரமானசூன்யக்காரியாக, இரண்டு exremekalaga காட்டப்படுகிறார்கள் .இரண்டு கேரக்டர்களுமே நிஜ வாழ்க்கையில் இல்லாதவர்கள் அப்படி இருக்கவும் முடியாதுஎன்பதே நிஜமான் உண்மை . நம் பெண்களும் நல்ல கேரக்டரை பார்த்து திருந்த போவதும்இல்லை ,ஐயோ பாவம் என்று பரிதாபப்படுவார்களே தவிர அவளின் அதீதமான
நல்ல பண்புகள் பாதிப்பதில்லை. மாறாக வில்லியின் நடை உடை தன்மைகள் மக்களிடம் ஊடுருவி ஒரு எதிர்வினையை உருவாக்கிவிடுவதுதான் தவிர்க்கமுடியாதஉண்மை.
*
நம் இயக்குநர்களுக்கும் வேறு கதைகளனை தேர்ந்தெடுத்தால் எடுத்தால் என்ன ? திரும்ப திரும்ப இதே போல் யோசிப்பது அவர்களின் மழுங்கதனத்தையும் சிந்தனை வறட்சியையும்தான் முன்னிருத்துகின்றன. காரணம் ,கேட்டால் மக்கள் ரசிக்கிறார்கள் என்பார்கள். அய்யா, நாம் நல்லதே கொடுப்பொம் . kb , பாலுமகேந்த்ராவின் கதை நேரம் இவற்றை மக்கள் ரசிக்கவில்லையா ? கொஞ்சம் மக்களை "எஜுகேட்" பண்ணுவதாக இருக்ககூடாதா?.
இப்போதும் நல்ல தொடர்கள் வேறு வேறு கதை களனில் வெளிவருகிறது .விசாரணை தெக்கத்தி பொண்ணு என்று உதாரணம் சொல்லலாம். இயக்குனருக்கு ஒருகொடுமை என்னெவென்றால் footage கொடுக்கணும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம் இல்லாவிடில் அவருக்கு ஸீர்ரியலிருந்து கல்தா. எனவே நீளமான நீர்த்துப்போன வசனங்கள் மாடி ஏறுவது கார் ,ஆட்டோவில் போய்க்கொண்டெயிருப்பது , நீளமான hospital strecturஎ
shots , ஒருவர் 9 nimitam 48 வினாடி ஒன்று விடாமல் பேசிவிட்டு மேலும் சில builup அர்குமென்ட் சாட்ஸ் இங்கு ஒன்லி RR. இறுதியில் ஓகே நான் சொல்லறத சொல்லிட்டேன் அல்லது முடியவேமுடியாது அல்லது இப்ப புரிஞ்சுதா என்று ஸீரியஸாக கேட்பது .9 நிமிடமா புரியாதத எதசொல்லி புரியவச்சார்கள்
என்பது மேதகு இயக்குனர்க்கே வெளிச்சம் . மேலும் அவர் டயலாக் paperi பார்ப்பதே ஸ்ப்பாட்டில்தான் கேட்டால் writter spotil தான் எழுதுவார் அவரை
கேட்டால் oneline இப்பதான்கைக்கு வந்தது என்பார் .நாம் எவ்வள்வு அசட்டையாய் இருக்கிறோம் .இப்படி இருந்தால் எங்கு quality வரும்?
[ஒரு சில இயக்குனர்கள் ] dialoge paperi ல் இருப்பதை அப்படியே எடுத்து கொடுப்பதுதான் dir முக்கிய வேலை. அவருக்கு சுய சிந்தனை ,சுரணை ,தன்னுணர்வு ஏதும் இலலாதவராக இருக்கிறார் . தவறானாலும் திருத்துவதோ அல்லது change பண்ணுவதோ அவருக்கு பயம்.அதற்கு தகுதியற்றவராக திராணியற்றவராகவே அறியப்படுகிறார்., இது அவரின் மொன்னைதனத்தின் வெளிப்பாடு என்றுதான் சொல்லவேண்டும்.
இது விசுவல் மீடியா என்பதை அவர்கள் குழிதோண்டி புதைத்துவிட்டார்கள். ஒரு பெண் கையில் poison என்று எழுதபபட்ட விஷ பாட்டில் அதற்கு 98 CLOSE UP சாட்ஸ் வேறு ,. எடிட்டரின் கொடுமையால் BUILDUP எப்பக்ட்ஸ் வேறு . அந்த பாட்டிலை தூக்கிபிடித்து "அடியே கமலா இந்தவிசத்தை சாப்பிட்டதும் உன் வயித்துலருக்கிற கொழந்த காலிடி... வச்சேனில்ல ஆப்பு "... என்றதும் நாமே விஷம் சாப்பிட்ட து போல் ஆகிறோம் .நம்உச்சி மண்டையில கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் .

எடிட்டர் கொடுமை சொல்லி மாளாது அத்த்னை கிறுக்குதனங்களையும் கொட்டி சாரி காட்டி நம்மை மிரள வைப்பவர்.வில்லி சாதாரணமாக் நாப்கின் வாங்க கடைக்குசென்றாலும் ஸபின், பிளாஷ் எபக்ட்ஸ் , கார்கதவை ரெண்டு தடவை திறந்து சாத்துவது, மேலும் பாஸ்ட் motion , ஸ்லொ motion என்று நம்மை பின்னி பெடல் எடுத்துவிடுகிறார்கள். டாஸ்மாக் இல் குடித்துவிட்டு முனியாண்டி விலாசில் முட்டைபரோட்டா சாப்பிட்டு வாந்தி எடுத்தாற்போல அத்தனை கொத்துக்கறி எபக்ட்ஸ்.மண்டைக்குள் 1000 ஆணிகளை அடித்தார்ப்போல் ஒரு மனப்பிறழ்வு நிலை. .இவர்கள்இன்னும சினிமா புரியாத அரைntக்காடு என்றுதான்
சொல்லத்தோன்றுகிறது . உன்னைப்போல் ஒருவன் ஒரு ஸ்பீட் ஸ்கிரிப்ட் கொண்ட ஆக்சன் மசாலா அதில் கிஞ்சித்தும் ஒரு எபக்ட்ஸ் இல்லை .அந்தபடத்திற்கு தேவை என்றாலும் வைக்கவில்லை. ஆனால்,கந்தசாமி படம் முழுக்க எப்க்ஸ் , எடிட்டிங்கில் ஸ்பீட் பண்றேன் என்று கண்ணுக்கு உறுத்தல் ஆனதுதான் மிச்சம் .இந்தபடத்தைப்பொறுத்தவரை ஸ்க்ரீன்ப்ளே ஸ்பீட்இல்லை என்பதாலேயே எபக்ட்ஸ் இருந்தும்வேஸ்ட். மொக்கை ஷ&க்கு பாலிஷ் போட்டது போல் .....எதும் சரியான அளவில் இருந்தால் நன்றாகவே இருக்கும் என்பது முற்றிலும் உண்மை.

வி வி எஸ் என்ற பழம்பெரும் கதாசியர் சொன்னது "நான் ஒரு திருடன் ,கதை திருடன் அதுதான் என் வேலை. நன்றாக அந்த வேலையை செய்கிறேன் ."அவர்
சொன்னதின் அர்த்தம் காப்பி அடிப்பது அல்ல. பல வெறறிப்படங்களின் காரணகர்த்தாவான சிறந்த கதாசிரியருமான அவர் தன்னடக்கத்துடன் சொன்னது அது . கதை திருடன் என்று சொன்னதின் உள் அர்த்தம் புராணங்கள்,இலக்கியம்,ராமாயணம் , கதைகள்,சிறந்த் நாவல்கள் என்று நிறையபடிக்கிறார். அதிலிருந்து ஒரு கதையை புனைகிறார் .இது திருட்டு அல்ல. நம்மவர்கள் எங்கே படிக்கிறார்கள்? தினத்தந்தியையும் குமுதத்தையும் ராணி முத்து குடும்பநாவலையும் படிப்பவர்களுக்கு எப்படி ரசனை முதிர்ச்சி இருக்கும்? புது சீரியல் ஒன்று" மாதவி "வெற்றிகரமாக கோலமிட்ட இயக்குனர் என்பதால் பஸ்ட் எபி பார்த்தேன்.அத்தனை வக்கிரம்.ஒரு சின்ன தவறுக்கு கோரஸ் பாடும் கதாநாயகி அவள் செய்த சின்ன தவறுக்கு" சாரிரத்த விட உன் சரீரம் நல்லருக்கு. வச்சு பொழச்சுக்கு" என்று மியூசிக் டிரெக்டொர் காரி உமிழ்கிறார். DIRECTOR
அந்த ryhming வார்த்தைகளுக்காகவே அந்த் dialogue வைத்து விட்டார் போலிருக்கு. அதாவது writter அவரின் மன நிலையிலெயெ வசனம் எழுதுவது ,
இன்னொரு சீன் சிலிண்டர்காரன் உள்ளே சிலிண்டர் மாட்ட லேட் ஆகிறது ,சந்தேக புருஷன், ஏண்டி சிலின்டர்காரனைக்கூட விடமட்டியா? வார்த்தைகளில் எவ்வளவு அமிலத்தன்மை .அருவருப்பு, சாடிசம் . ஊடகம் வழியே ஊடுருவதைப் பார்க்கும்போது, கசிவில்லை , நம் வீட்டுக்குள்ளளேயே சாக்கடை வாஷ் பேசின் டேப்பில் வாட்டர்போல் கொட்டுகிறது. மலத்தை கரைத்து வாயில் ஊற்றுவதுபோல் நாராம்சம் ., ஒரு கலாசார சீரழிவு. பண்பாட்டு ஒழிப்பு. இத்தகைய காட்சிகள் காண்கையில் ஒவ்வொரு முடியாய் ஒவ்வொரு நகங்களாய் பிடுங்கி எறியப்படும் வதை முகாமில் அடைபட்ட ஒரு கைதியைபோல் உண்ர்கிறோம்.
இன்னொரு விசயம் ஒருசீனில் 29 நபர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொரு டயலாக் முடிந்ததும் ஆளுக்கு ஒரு cs . சமையல் காரி வேலைக்காரன் வாட்ச்மேன் ,நோயால் படுத்திருக்கும் காது கேட்காத கிழவி ,பிறந்து இரண்டு மாதமே ஆன பச்சிளங்குழந்தை. அதுவும் சீனில் இருக்குதல்ல .இப்படி வஞ்சகமில்லாமல் வாரி விடுவார்கள் .ரெண்டு பேரை நிற்கவைத்து டூ சாட் ஆக எடுக்கலாம் அதை நம் அறிவிஜிவி இயக்குனர் விரும்பமாட்டார்

இப்படி எழுதுவதின் நோக்கம் நம்மவர்களை புண்படுத்துவது அல்ல நல்ல தொடர்கள் வரவேண்டும் என்ற ஆதங்கம்தான் .
மீண்டும் kb யின் 'ஒரு கூடை பாசம் ". "லேக்"இல்லாம்ல் on stage இல் 2 மணி நேரத்தை சுவராசியமக்குகிறார். நம்மிடம் DV 390 ,400 இருந்தும் stage டிராமாவாக அசுவரசியப்படுத்துகிறோம் .