அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

ஒரு சாதிக்கட்சி தலைவருடன் ஒருமினி பேட்டி


சார் இந்த  கம்யுட்டர் காலத்துல சாதி அவசியமா?

இன்னும் 1000 வருசம் கழிச்சு இதே கேள்விய உங்களமாதிரி ஒரு நிருபர் என்னமாதிரி ஒருசாதிக்கட்சிதலைவர்கிட்ட கேட்பான்..ஏன்னா மனுசன் இருக்கறவ‌ரைக்கும் சாதி அழியாது .கவர்மெண்ட்‌டே சாதி கேட்குறப்போ ஏன் சாதி வேண்டாங்கறீ்ங்க?

இதனால் கலவரம் நிறைய வருதே சார்

நம்ம குடும்பத்துல புருசன் பொண்டாட்டிக்கு நடுவுல வந்தா அது பிரச்சனை ஊர்ல ரெண்டு பேர் அடிச்சிகிட்டா சண்டை, ரெண்டு நாடு அடிச்சிகிட்டா அது போர், ‌ ரெண்டு சாதிக்கும்பல் அடிச்சிகிட்டா அது சாதிக்கலவரம். மனுசங்கன்னு இருந்தா சண்டைன்னு இருக்கும்  தவிர்க்கமுடியாதது. சாதியால மட்டும் சண்ட வர்றதுங்கறத ஏத்துக்கமுடியாத வாதம்

சாதி இல்லாம  வாழ முடியாதா?

நாங்க எப்படி கட்சி நடத்தறது? உலமே  இனம் வர்க்கம்னு பிரிச்சி வச்சிருக்காங்க இதனாலதான் போர் உருவானதா வரலாறு ‌ ‌சொல்லுது .ஹிட்லர் யூதர்கள கொன்னு குவிக்கலயா? அமெரிக்கன் கறுப்பினமக்கள கொல்லலியா? இனம் மதம்னு உலகஅளவிலயும், சாதினு நம்ம ஊர் அளவிலயும் இருக்குற  இந்த சாதிய ‌‌சமுதாய ‌‌அமைப்பு  உலகம் இருக்கற வரைக்கும் இருக்கும்

பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பானு  சொல்லி இருக்கிறாரே ..?

அதே பாப்பாவுக்குத்தா‌னே அரசாங்கம் சாதிச்சான்றிதழ் கேட்குது அதுமட்டுமில்ல பாரதி உயி‌ரோடு இருந்து இந்தகாலத்துல ‌அரசியலுக்கு வந்தார்னா அவரும் சாதி அவசியம்பார்
.

சாதி வெறிய தூண்டறமாதிரி  பேசறீங்களே?
 
சாதி வெறிய தூண்டற மாதிரி பேசல சாதி உணர்வத்தான் தட்டி எழுப்பறேன் உணர்வு வேற.... வெறி வேற

உங்க கட்சி ஆட்சிக்கு வந்தா என்ன மாதிரியான திட்டங்கள் வச்சிருக்கீங்க----?

சாதி விட்டு சாதி கல்யாணம் ‌பண்றவங்களுக்கு  ‌ரேசன் கார்டு கிடையாது ,  சலுகைகள். இலவசங்கள் கிடையாது ‌,குழந்த பெத்துக்க உரிமை கிடையாது  குடும்பகட்டுப்பாடு ஆ‌‌பரேசன் அரசே பண்ணிடும்

சாதிய  இன்றைய தலைமுறையினர் எதிர்க்கறாங்களே?

நடைமுறைக்கு ஒத்துவராது,ஏன்னா உறவு‌முறையே இல்லாம ‌ அடுத்த தலைமுறை தடுமாறும்,



1 கருத்து:

கோவை நேரம் சொன்னது…

இவரு மாதிரி ஆட்சிக்கு வந்தால் நாடு எப்படிங்க முன்னேறும் ...?