அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

உண்மையான கர்ணன்


     சிவாஜியை வைத்து  கப்பலோட்டிய தமிழன், பலேபாண்டியா, வீரபாண்டியகட்டபொம்மன் என தொடர்ந்து பல படங்கள் இயக்கி  தயாரித்தவர். இவர் இயக்கித்தயாரித்த கர்ணன் வந்த புதிதில் அந்த படம் சரியாகப்போகவில்லை. (டிஜிட்டல் உைறடெக் கர்ணன் க‌லக்சனில் கலக்கியது  தனிக்கதை)  இதனால் தன்சொத்துக்களை இழந்தார்,கடனாளி ஆனார் , என்னசெய்வது எனத்தெரியாமல் விழித்தார் .அப்போது நண்பர்கள் எம்ஜிஆைரைப் போய்ப்பாருங்கள். அவர் கால்சீட் தருவார் என்று சொல்ல நான் இதுவரைக்கும் அவரை வைத்துப்படம்பண்ணவில்லை அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அவருக்குப்போட்டிநடிக‌ரை வைத்தே படம் எடுத்து இருக்‌கிறேன் என்னை ஏற்றுக்கொள்வாரா? என்ற சஞ்சலத்தில் இருக்க பின் இறுதியில் எம்ஜிஆரைக்கேட்டேவிடுவது எனவிசயத்தை சொல்லியிருக்கிறார்.அதனால் என்ன நாம படம்பண்ணலாம்,என்று வாக்கும் கால்சீட்டும் கொடுக்க தாங்கமுடியாத சந்தோசம் இயக்குநருக்கு படம் பூசைபோடப்பட்டஉடன் அவருடைய வீட்டை மீட்டார் கடன்களிலிருந்து விடுபட்டார். 


அந்த இயக்குனர் பிஆர் பந்துலு.
படம் ஆயிரத்தில் ஒருவன்.


மூத்த த‌ிரைக்கலைஞர் "கரகாட்டக்காரன்" சண்முகசுந்தரம்   மலரும் நினைவாக சொன்னது

கருத்துகள் இல்லை: