அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

வார்த்தை அரசியல்



           இப்போதெல்லாம் இலவசம் என்ற வார்த்தை வருவதேயில்லை அதற்குபதில் விலையில்லா பேன், விலையில்லா மிக்ஸி ,விலையில்ல‌ா எக்ஸட்ரா திட்டத்தை மாற்றச்சொன்னால் சொற்களை மாற்றுவது  இதுவும் ஒரு  தேர்ந்த அரசியல்..  தெரிந்தவர்கள்  பார்த்துவிட்டால் சில நேரங்களில் காதலனை  பாய் பிரண்டு என்றழைப்பதுபோல். வேண்டாம் டாபிக் மாறுகிறது ;அரசியலுக்கே வருவோம்.

        சராசரிமனிதன் ஒருவனைத்தீர்த்துக்கட்டினால் கொலை, கவர்‌மெண்ட்டே கட்டம் கட்டி காக்கிமூலம்
தீர்த்துக்கட்டினால்  அது என்கவுண்ட்டர்.‌ சாமான்யன் பணத்தை  எடுத்தால்  திருட்டு, கொள்ளை.
எம்எல்ஏ எம்பி பணத்தை திருடினால் சாரி எடுத்தால் அது ஊழல் .சாதாரண  சக மக்கள்  சுயநலத்திற்காக செய்தால் ஏமாற்றல் சூழ்ச்சி ; அதையே அரசியல்வாதி செய்தால் ராஜதந்திரம்.

       தமிழ்நாட்டில் நல்லாட்சி நடக்கிறதோ இல்லையோ தமிழை வைத்து சொல்லாட்சி நடக்கிறது
வாழ்க எம்தமிழ் .இதுவும் அரசியல் இதுதான் அரசியல்.

கருத்துகள் இல்லை: